மன்னாரில் பொலிஸாரினால் புதுவருடத்தை முன்னிட்டு 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு !

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸ்சாந்தன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆயியோர் கலந்து கொண்டதோடு,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க

வேலை வாய்ப்புக்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

Scroll to Top
Close Bitnami banner
Bitnami