புதுவருடத்தை முன்னிட்டு மன்னாரில் விசேட பூஜை வழிபாடுகள்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

2019 ஆண்டு நிறைவடைந்து புதிதாக மலர்ந்துள்ள புதுவருடத்தை வரவேற்கும் முகாமக மன்னார் மாவட்டம் முழுவதும் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் ஆராதனை நிகழ்வுகள் இடம் பெற்றன 

குறிப்பாக மன்னார் புனித செபஸ்ரியார் தேவாலயதின் புதுவருட திருப்பலியானது மேதகு மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பம் ஆகி இடம் பெற்றதுடன்  கிராம ரீதியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும் வருட பிறப்பை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றன

அதே நேரம் மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் மறைமாவட்டத்தின் மூத்த
பங்குமாகிய பேசாலை புனித.வெற்றி அன்னை ஆலயத்திலும் வருடப் பிறப்பு
திருப்பலியை கத்தோலிக்க சட்ட வல்லுனரும் பேசாலை பங்கு தந்தையுமான
அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜா அடிகளார் தலைமையில் உதவி பங்கு தந்தை
அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்

அத்தோடு புகழ் பெற்ற திருகேதீஸ்வர ஆலயத்திலும் புதுவருடத்தை முன்னிட்டு திருகேதீஸ்வர பிரதம குரு கண்ணன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது

தொடர்சியாக ஏப்ரல் 21 திகதி குண்டு வெடிப்பு துயரத்தில் இருந்து மீண்டு  மக்கள் புத்தாடைகளை அணிதும் இனிப்புக்களை பகிர்ந்து கொண்டும் உறுவினர்கள் இல்லங்களை தரிசித்தும் புது வருடத்தை கொண்டாடி வருகின்றனர்

இதையும் தவறாமல் படிங்க

வேலை வாய்ப்புக்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள தளங்கள்

Scroll to Top
Close Bitnami banner
Bitnami